Friday, September 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

admin by admin
September 25, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள
படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின்
இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த
படைப்பாக இது உருவாகியுள்ளது.

நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன்
இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார். சமீபகாலமாக கதையின்
நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் எலியும் ஒரு முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

You might also like

மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் படப்பிடிப்பு!

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையைத் தொடர்ந்து அளித்து வரும்
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி
திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள
எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்
படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

எனக்கு குறிப்பிட்ட சில இயக்குநர்களை ரொம்பவே பிடிக்கும், காரணம் என் ரசனை அந்த
மாதிரி. அந்த வகையில் ;தரமணி படம் நடந்த சமயத்தில் இயக்குநர் ராமை சந்தித்துப்பேசினேன். ஆனாலும் அவரை வைத்துப் படம் எடுக்கும் அளவிற்கு நாம் இன்னும்
வளரவில்லையோ என எனக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது..

அந்த சமயத்தில் நீ சின்ன தயாரிப்பாளர் தானே? என்று என்னை சிலர் ஏளனமாகப்
பேசியதைக் கேள்விப்பட்டு, நடிகர் சிம்பு தானாகவே முன்வந்து கால்ஷீட் கொடுத்து என்
படத்தைத் தயாரியுங்கள் என்று கூறினார். வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்கியதால்தான்
இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன்.

அந்த சமயத்தில் ராம் அண்ணனிடம் இருந்து ஒரு கதை வந்தது; என்னைத் தேடி வந்த அந்த
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். அதுதான்ஏழு கடல் ஏழு மலை

நானும் எஸ்.ஜே. சூர்யா சாரும் தான் இந்தக் கதையைக் கேட்டோம். எனக்கு கதை
பிடித்திருந்ததை விட இயக்குநர் ராமுடன் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம்
இருந்தது. சிலர்இவனிடம் பணமே இல்லை, இவன் எப்படி படம் எடுக்கப் போகிறான்என்று
கூட வதந்திகளைப் பரப்பினார்கள். அப்போது அவரிடம், அண்ணே, இதுவரை 10 படங்கள்
எடுத்திருக்கிறேன்; ஒரு நாள் கூட சூட்டிங் ஸ்பாட்டில் பணம் இல்லை என்று படம் நின்றதே
இல்லை. என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே அதைக் கணக்கிட்டுப் படத்தையே
துவங்குவேன் என்றேன்.

ஹீரோ நிவின்பாலி என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷம்பிரேமம்படத்தில் இருந்தே
அவரைப் பிடிக்கும். அதன்பிறகு சூரி வந்தார்.. கதாநாயகி என்கிறபோது கேட்கவே
தேவையில்லை, அஞ்சலியிடம் ஒரு போன் காலிலேயே சம்மதம் வாங்கி விட்டோம். ராம்
அண்ணன் படம் என்பதால் குட்டி இசைஞானி யுவன் சங்கர் ராஜாவும் எங்கள் படத்திற்குக்
கிடைத்தார்.

இந்தப் படத்தில் இப்போது கடைசிக் கட்ட வேலை வரை இயக்குநர் ராம் தான் உழைத்துக்
கொண்டிருக்கிறார். அவருடன் இன்னும் எத்தனை படம் வேலை செய்வது என்றாலும் எனக்கு
சந்தோசமே.

இந்தப் படத்தை ஆழி பிக்சர்ஸ்நிறுவனம் வாங்கி ;சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மூலம்
வெளியிடுகிறது. கேரளாவில் துல்கர் சல்மானின் வேஃபேரர் (Wayfarer) நிறுவனம்
இப்படத்தை வெளியிடுகிறது. தெலுங்கில் சுப்பா ரெட்டியின் கலர் அண்ட் கலர்ஸ் நிறுவனம்
வெளியிடுகிறது. கர்நாடகாவில் டிடி என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. ஓவர்சீஸ்
உரிமையை ட்ரிபுள் எம் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறதுஎன்றார்.

நடிகர் சூரி பேசும்போது,

எல்லோருக்கும் நன்றி! மண்டாடி படத்தின் வெற்றியை தினந்தோறும் கேக் வெட்டி
கொண்டாடிக் கொண்டே இருக்கிறேன். அந்த படம் வந்ததிலிருந்து அது ரொம்ப பெருமையா
இருக்கு, சந்தோஷமா இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த என்னுடைய
இயக்குநர்களுக்கும், இங்கு இருக்கும் மீடியா நண்பர்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும்
நன்றி. நீங்க கொடுத்த இந்த வாய்ப்பையோ, இந்த வெற்றியையோ எதையும் மண்டையில்
எடுத்து வச்சுக்கிட்டு விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆடாமல், அந்த வெற்றியை, அந்த

மரியாதையை தலை வணங்கி எடுத்து ஓரமா வச்சுட்டு அடுத்த வேலைக்கு நான் எப்பவுமே
ஓடிக்கிட்டே இருப்பேன். நீங்களும் என்னை புஷ் பண்ணிக்கிட்டே இருக்கீங்க.

பொதுவாக முக்கியமான இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், பாலா, மிஷ்கின் இவங்க
படங்களில் எல்லாம் நடிக்கணும் அப்படிங்கற ஆசை இருந்துச்சு. அதில் எனக்கு வெற்றிமாறன்
அண்ணன் கிட்ட வாய்ப்பு கிடைச்சு அந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டோம்னு
நினைக்கிறேன். அப்போதுதான் அருண் விஸ்வா மூலமாக எனக்கு ராம் அண்ணன்
அறிமுகமானார். அந்த சமயத்தில் தான்,இந்த படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு,
நீங்கள் பண்றீங்களா என்று என்னை நம்பி கூறினார். எனக்கு ஒரு பக்கம் ஆசையாக
இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ராம் அண்ணா ஏரியா கொஞ்சம் ரிஸ்க்கான
ஏரியா& என்று சிலபேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அங்கே போனதற்கு
பிறகுதான் தெரிந்தது இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது என்று!

ஒரு இயக்குநர் இடத்திலிருந்து அவர் பேசாமல், நார்மலாக ஜாலியாக பேச ஆரம்பிச்சாரு;
எனக்கு பயங்கர நம்பிக்கை வந்துருச்சு. 'காமெடி பண்றது சாதாரண விஷயம் இல்லை, ரொம்ப
கஷ்டமான வேலை அப்படின்னு அவர் பேசப்பேச எனக்கு பயங்கர தைரியம் வந்துச்சு.
அப்படித்தான் இந்த படத்துக்குள்ள நான் வந்தேன். வெற்றிமாறனிடம் சொன்னபோது,,
தாராளமாக போங்க; இப்ப நம்ம படத்துல ஒன்னு இருக்கு பாத்தீங்களா, அதே மாதிரி அங்க
போனீங்கன்னா அங்க ஒன்னு புதுசா கத்துக்கலாம், அது உங்களுக்கு ரொம்ப பெருசா உதவும்
அப்படின்னு சொன்னாரு.

எப்படா ராம் அண்ணனுடன் சூட்டிங் போகலாம்னு காத்திருந்தேன். முதலில் கூட்டிட்டுப்
போனார்கள்; நல்ல ஒரு பெரிய ட்ரெயின் செட், பஞ்சபூதங்களுமே அதை சுத்தி இருந்துச்சு,
கூடவே 70 எலியும் இருந்துச்சு! அதுக்குள்ளதான் ஷூட்டிங். இதுல என்ன காமெடினா,
அண்ணனே எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் நான் டயலாக் பேச
ஆரம்பிச்சேன். அப்ப என்ன சொன்னாருன்னா:;முதல் ஆக்சன், ரெயினுக்கு (மழை);
இரண்டாவது, ட்ரெயினுக்கு; மூன்றாவது ஆக்சன், விண்டோ காற்று வருவதற்கு; நான்காவது,
ட்ராலிக்கு; ஐந்தாவது ஆக்சன், காற்று அடிப்பதற்கு; ஆறாவது, தண்டருக்கு (இடி); மின்னல்
வருது… அண்ணே எனக்கு எப்போ ஆக்சன் வரும் இருங்க, இதுதான் ஆர்டர்., ரைட்டு

கரெக்ட்டா இருங்கன்னு சொல்லுவாரு. ஒன்பதாவது ஆக்சன், அது கூட இல்ல, ஒன்பது
எலிக்கு! பத்தாவது ஆக்சன், எங்களுக்கு! இப்படி படப்பிடிப்பு முழுவதுமே ஜாலியாகவும்
புதுசாகவும் இருந்தது என்றார்.

 

admin

admin

Related Posts

மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் படப்பிடிப்பு!
News

மதுரையில் கிடா விருந்துடன் தொடங்கிய தனுஷ் படப்பிடிப்பு!

by admin
September 25, 2026
விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!
News

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

by admin
September 25, 2026
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!
News

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

by admin
September 25, 2026
லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!
News

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

by admin
September 24, 2026
வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’   3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!
News

வாகீசன் – மோனிஷாவின் ‘அன்னக்கிளி’ 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை!

by admin
September 24, 2026

Recent News

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ டிரெய்லர்!

September 25, 2026
விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

விறுவிறுப்பான படப்பிடிப்பில் ‘கிங் அண்ட் குயின்ஸ்’!

September 25, 2026
“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி

September 25, 2026
லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

லவ் & வார் அப்டேட்: 2027 ஜனவரி 21 ரிலீஸ்!

September 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?