என்.டி.ஆருக்கு ஜோடி தேடி அலையும் பிள்ளை

இந்தியா முழுமையும் தேடி இரண்டு பெரிய நடிகைகளில் ஒருவரை செலக்ட் செய்யலாம் என்று நினைத்தார்கள். மிகப்பெரிய நடிகரின் வாழ்க்கை வரலாறை படமாக்க முயற்சி செய்கிறபோது அவருக்கு ஜோடி கிடைப்பதுதான் கஷ்டம். அதிலும் இந்திய முழுமையும் தெரிந்த என்.டி.ராமராவின் வரலாறு என்கிற போது சொதப்பி விடக்கூடாது என நினைப்பதில் தப்பில்லை.
என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கேரக்டருக்கு என்,டி,ஆர். பாலகிருஷ்ணா தேடியதில் பிரியங்க சோப்ரா,வித்யாபாலன் ஆகியோரை அணுகலாம் என முடிவாகியது. ஆனால் சிலர் பிரியங்க சோப்ரா சரியாக பொருந்த மாட்டார் ,வித்யா பாலன்தான் பொருத்தமாக உடல் வாகுடன் இருக்கிறார் என சொல்லவே அவரையே அணுகினார்கள். உண்மையில் அவர்தான் பொருத்தமான நடிகை. தேசிய அளவில் தெரிந்த முகம்.
அவருக்கும் மகிழ்ச்சி. கதையைக் கேட்டார் ,பிடித்துவிட்டது.
இவ்வளவு சம்பளம் என முதல் நிபந்தனை ஓகே ஆனது. இரண்டாவது நிபந்தனை. “சொன்ன கதையில் கொஞ்சம் கூட மாற்றம் செய்யக்கூடாது”
“அப்படியா யோசனை செய்கிறோம்!”
” மூன்றாவது நிபந்தனை?”
“எடுத்துவிட்டு பின்னர் நீளமாக இருக்கிறது என சொல்லி என்னுடைய போர்ஷனில் கை வைக்கக்கூடாது!”
அடேங்கப்பா…என்னா மாதிரி யோசிக்கிறாங்க! “சரி, இதையும் பரிசீலிக்கிறோம்.”என பதில் வருகிறது. நாலாவது நிபந்தனை?
“கால்ஷீட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது.!”—-இதற்கு சரி என்பதாக சொல்லிவிட்டார்கள்.’ஐந்தாவது கண்டிஷன் என்ன மேடம்?’
“பேமன்ட் பக்காவாக இருக்கவேண்டும்.இதற்கெல்லாம் ஓகே என்றால் நானும் நடிக்கத்தயார்” என்று சொல்லிவிட்டாராம் வித்யாபாலன்.
ஆனால் என்டிஆர் பாலகிருஷ்ணா தரப்பில் நிறையவே யோசிக்கிறார்கள். என்.டி.ஆரை முன்னிலைப்படுத்தவேண்டிய படம். அவரை பின்னுக்குத் தள்ளினால் படம் ஓடாது, ஆகவே என்ன பண்ணுவது என யோசிக்கிறார்கள். நல்ல முடிவாக எடுங்கப்பா!