படப்பிடிப்புக்கு பைக்கில் சென்ற சல்மான்- ஜாக்குலின்!

காதலி கண்ஜாடை காட்டிவிட்டால் மாமலையும் கடுகு ஆகி விடுமாம் இங்கு ஜாக்குலின் கண் அடித்தாரா சல்மான்கான் கை ஜாடை காட்டினாரா என்பதெல்லாம் தெரியவில்லை.பைக்கில்  காதலியை பின்னால் உட்கார வைத்து பனி படர்ந்த மலையில் சாலை வழியாக கிளம்பி விட்டார் ஹீரோ சல்மான்.

மான் வேட்டையாடி சிறைத் தண்டனை அடைந்து ஜாமீனில் வந்திருக்கும் காதல் மன்னன் சல்மானை(52.)  தனது இளமை (?) திறமைக்காட்டி கவர்ந்திருக்கிறார் என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் (32) பற்றி சொல்கிறார்கள். எதைக்காட்டி கவர்ந்திருந்தாலும் காதல் காதல்தானேய்யா!

அவர்களே பைக்கில் போகிற பொது நாம் மட்டும் காரி போனால் நல்லா இருக்குமா என்று தயாரிப்பாளர் , இயக்குநர் உட்பட ஒன்பது பெரும் பைக்கிலேயே அவர்களை பின்தொடர்ந்தார்கள்.கார்கிலில் இருந்து ‘லே’வரை !

படத்தின் பெயர்  ரேஸ் 3.

உறைபனி உடம்பில் ஊசியாக குத்தும் ,ஆனால் சல்மானை என்ன செய்யும்? சால்வைகள், ஸ்வெட்டர் என போட்டிருந்தும் பட்டு மேனியாளை நடுங்க வைத்து விட்டது. ஆவி பறக்க டீ குடிக்க தனது ஸ்வெட்டரையும் கழற்றி பனியன் மட்டுமே அணிந்து  அருகில் பாதுகாப்பாக நிற்கிறார் சல்மான்கான்.

பனியன் கம்பெனிகள் கவனிக்க!