எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பயப்படாத அரசும் அதிகாரிகளும் ஒற்றை தனிமனிதனான ‘டிராபிக் ராமசாமியை பார்த்தால் பயம் கொள்கிறார்கள். தைரியமாக ஆளும் கட்சியின் பேனர்,பிளக்ஸ் போர்டுகளை கிழித்து எறிகிறார் ராமசாமி. நீதி மன்றம் இவருடைய வீடு மாதிரி ஆகி விட்டது.
“சட்ட மீறல் இது! யார் செஞ்சா எனக்கென்ன சீப் மினிஸ்டர்,பிரைம் மினிஸ்டர் எந்த கொம்பராக இருந்தாலும் சட்டத்தை மீறினால் விடமாட்டேன் ” என அறுபது ஆண்டுகளாக களமாடுகிறவர் டிராபிக் ராமசாமி.!
தாம்புக் கயிறு என்று அவரை தூக்கிப் போட முடியவில்லை. அதுவே தங்களுக்கு சவுக்கடியாக விழுந்து விடுமே என்கிற அச்சம். பல் இல்லாத கிழட்டுப் பாம்பு என கடக்கவும் முடியவில்லை. புஸ்சென ஆளு உயரத்துக்கு ராஜநாகமாக நின்று படம் காட்டி ஆட்டம் போடுகிறது.
இப்படி நீதிக்குப் போராடி வருகிற டிராபிக் ராமசாமியின் ஆடியோ உரிமையை டிரெண்டிங் மியூசிக் வாங்கி இருக்கிறது. இயக்குநர் எஸ்.ஏ,சந்திரசேகரன்தான் ராமசாமி..அருமையான தேர்வு. சட்டசேகர் என ஒரு காலத்தில் அதிரடியான படங்களைக் கொடுத்தவர். இவரின் வாயில் யார் யார் மாட்டுகிறார்களோ?
இணையாக ரோகிணி. ஆர்.கே. சுரேஷ் .பிரகாஷ்ராஜ் என இரண்டு முரட்டு முகங்கள்.,அம்பிகா, கருத்து கஸ்தூரி ஆகியோரும் இருக்கிறார்கள். ஸ்பெஷல் அப்பியரன்ஸ் விஜய் ஆண்டனி. இவர்களைத் தவிர மிகப்பெரிய நடிகரும் சிறப்புத் தரிசனம் தருகிறார் என்கிறார்கள். தளபதி,விஜய், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இவ்விருவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?