நாங்களும் உடல் பயிற்சி செய்வோம்ல!

இஷா தல்வாரை ஞாபகம் இருக்கா?
தில்லுமுல்லு, மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய படங்களில் நடித்தாரே அதே தல்வார்தான்!
எத்தனையோ அவசர வேலைகள் நாட்டில் நடக்காமல் இருக்கிறபோது உடல் பயிற்சியின் அவசியம் பற்றி மத்திய மந்திரி சொல்லி வைக்க ஊரெல்லாம் ஒரே பயிற்சிதாம்!
அவர்கள் சாமான்யர்கள் அல்லர்!
பிரபலங்கள்! நடிகர்கள்,நடிகைகள். இவர்கள் அனைவரும் ஜிம் போகிற வழக்கம் உள்ளவர்கள். இருந்தாலும் மந்திரி சொல்லி விட்டார்,மோடியும் கோலியும் சவால் வேறு விட்டிருக்கிறார்கள் நாமும் விளம்பரத்தில் அடிபடலாமே என்று பாலிவுட்டில் இறங்கி கில்லி அடிக்கிறார்கள்.
இஷா தல்வார் தனது பங்குக்கு ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்.
“எனது வீட்டை நானே சுத்தம் செய்கிறேன்”என்பதுதான் அந்தப்படம்.