இன்னும் எத்தனை மாதங்கள்தான் காத்திருக்க முடியும்! புத்தம் புத்தம் மலர்கள் அன்றாடம் கோலிவுட்டுக்கு வந்திறங்கும் காலம் இது!
இதுவரை போடாத பேய் வேஷத்தில் நடித்திருக்கிறார் என்றால் யாருக்குத்தான் பார்க்க ஆசை இருக்காது?
இயக்குநர் மாதேஷ் ஆசை ஆசையாக மோகினி திரிஷாவை வளர்த்திருக்கிறார். இதுவரை தமிழ்த் திரைக்கு வந்துள்ள பேய்கள் லண்டன் மெக்சிகோ, தாய்லாந்து என்று போனதில் லை.ஆனால் மோகினி போயிருக்கிறாள் .
“படம் ரெடிங்க. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முறைப்படுத்தும் கமிட்டி எப்ப தேதி சொல்லுதோ அன்னிக்கி மோகினி காட்சி தருவாள்! முதன் முதலாக திரிஷாவுக்கு பிராஸ்தடிக் மேக்கப் போட்டிருக்கிறோம்.”என்கிறார் இயக்குநர் மாதேஷ்.
யோகி பாபு இருக்கிறார் என்கிற போது காமடிக்கு பஞ்சம் இருக்காது.!