“என்னப்பா ஆச்சு இந்த பொண்ணு ஸ்ருதிக்கு? ஆளே காணல. பாரின் பக்கமா போயிடுச்சா?” என்றால் அதெல்லாம் “இல்லிங்ணா,அது’கேங்க்ஸ்டர்’ ஆகிடுச்சு” என்கிற பகீர் தகவலை போடுகிறார் யுவராஜ்.
“புரியும்படியா சொல்லுப்பா””
ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.அதைத்தான் சொன்னேன்.முதல் செடியூல் மும்பையில் முடிந்து விட்டது.அடுத்த கட்டம் கோவாவில்!” என்கிறார் நம்ம ஆள்.
“ஸ்ருதியின் கேரக்டர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .அவர் லண்டனில் சர்வதேசமியூசிக் கோர்வையில் இருக்கிறார். இந்தியா வந்ததும் ஆரம்பமாகி விடும்.கமல் சார் டைரக்டு பண்ணும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் வேலைகளும் ஆரம்பமாகிவிடும் என்கிறார் ” என்றார் நம்ம பி.ஆர்.ஓ யுவி.