“நான் ஒண்ணும் தப்பா சொல்லல”–கன்னடம் பேசிய ரஜினி!

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்ச நீதி மன்றம் சொன்னதை வலியுறுத்தி  வரவேற்றவர் ரஜினி காந்த். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து கன்னடர்கள் காலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்தின் கருத்தை அவர் வாபஸ் வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

கன்னட திரைப்பட வர்த்தக சபையும் எதிர்ப்பு. கன்னட அரசு பாதுகாப்பு அளிக்கவேண்டு என உத்திரவிட்ட நிலையில்  நூறு தியேட்டர்கள் வரை காலா ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரஜினிகாந்த் கன்னட மொழியில் “நான் ஒன்றும் தப்பா பேசல.தயவு செய்து படம் பார்க்க வருகிறவர்களுக்கு தொல்லைகள்  செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.