பொதிகை மலைச்சாரலில் இன்று விஜய்சேதுபதியின் புதிய படத்துக்கு பூஜை போடப்பட்டிருக்கிறது,
‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் இயக்குநர் அருண்குமார் இயக்கப்போகும் இந்த படத்தில்சேதுபதிக்கு ஜோடி அஞ்சலி. வில்லனாக வந்து மிரட்டிவிட்டுப்போகும் அருள்தாசுக்கு முக்கிய வேடம். யுவன் இசை அமைக்கும் இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி வட்டாரங்களில் நடக்கிறது.
இன்னொரு முக்கிய அம்சம் இந்த பூஜையில் கலந்து கொண்டிருக்கிற முக்கிய புள்ளி குட்டிப்பையன் சூர்யா, அவருக்கும் இந்த படத்தில் கேரக்டர் இருக்கலாம் என்கிறார்கள்.