லண்டன் டாக்டரை அழைக்க அழகிரி ஏற்பாடு?

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞரை நேற்று தேசியத்தலைவர் ராகுல் காந்தி, சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோர் பார்த்தனர். சூர்யா, சிவகுமார் ஆகியோரும் பார்த்து ஸ்டாலினிடம் பேசிவிட்டு திரும்பினார்கள். இன்று காலை தளபதி விஜய் மருத்துவமனைக்கு வந்து பார்த்தார்.ஸ்டாலின்,முரசொலி செல்வம், உதயநிதி ஆகியோரையும் பார்த்து பேசி விட்டு சென்று விட்டார். இன்னும் வராமல் இருக்கும் முக்கிய நடிகர் அஜித் மட்டுமே!
இந்த நிலையில் சந்தடி சாக்கில் இன்னொரு செய்தியை மு.க.அழகிரி தரப்பினர் சொல்லி வருகிறார்கள், தனது லண்டன் நண்பர் வழியாக பிரபல டாக்டரை வரவழைக்கப் போவதாக சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
தற்போது செயற்கை சுவாசம் இல்லாமலேயே கலைஞர் சுவாசிக்கிறார் என்பது ஆறுதலான விஷயம். கல்லீரல் பிரச்னை பற்றி மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.