பாலியல் வன்முறை குற்றம் சாட்டிய நடிகையை தாக்கிய கும்பல்.!

என்றோ நடந்த சம்பவம் என்பதால்  மறந்து விடமுடியுமா, அல்லது மன்னித்து விட முடியுமா?

நானா படேகருக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றி நடிகை தனு ஸ்ரீ தத்தா தற்போது கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

எப்போதோ நடந்த சம்பவம் என்றாலும் பாலிவுட் பிரபலங்கள் தனு ஸ்ரீக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இந்த சம்பவம் பற்றி அப்போதே சொன்னதற்காக  தனு ஸ்ரீ யை  என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா?

தனு ஸ்ரீ காரில் சென்றபோது நானா படேகரின் ரசிகர்கள் காரை சுற்றி வளைத்திருக்கிறார்கள். கண்ணாடியை உடைத்திருக்கிறார்கள். சிலர் காரின் டாப் மீது ஏறி டங் டங் கென குதித்திருக்கிறார்கள். இவ்வளவு அக்கிரமங்களையும் சகித்துக் கொண்டு காருக்குள்ளேயே பயந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறார். நடிகை. யாரும் கண்ணாடியை எறக்கி விடவில்லை.உள்ளேயே இருந்து விட்டார்கள். போலீஸ் வரும் வரை  நடந்த அக்கிரமத்தின் வீடியோதான் தற்போது வைரல்!