பாகுபலி பிரபாஷை கட்டித் தழுவ ஆசை! ஆப்கன் நடிகை!

“மலர் கொள்ள வந்த தலைவா வா!

மனம் கொள்ள வந்த இறைவா வா.!

கையோடு கொண்டு தோளோடு சேர்த்துக்

கண்மூட வந்த கலையே வா!”

பார்த்தவுடனே  பாட வைக்கும்  பளிங்கு மேனிப் பாவை வார்னி ஹுசைன்.

ஆப்கானியப் பேரழகி.!

அண்மையில் இந்திப் படத்தின் புரமோஷனுக்காக  ஹைதராபாத் வந்திருந்தவரிடம் “எங்கள் பாகுபலி  பிரபாஸ் பற்றி என்ன சொல்கிறீர்கள்?”என பாசமிகு பத்திரிகையாளர் ஒருவர் கேட்க,

‘ஏன் கேட்டோம் ‘ என்றாகிப் போனார்,

“யாரது பிரபாஸ்?”

“சே…நம்ம வீட்டு அழகிய பூனைக்குட்டி  அண்டை நாட்டுக்காரிக்கு எப்படித் தெரியும்?” என குறுகிப் போனார் அந்த பத்திரிகையாளர்.

ஆனால் அந்த சொட்டைவாலைக்குட்டி சொப்பன சுந்தரி அடுத்துச்சொன்னதுதான் தீவிர வாத தாக்குதல்!

“என்னுடைய கனவில் ஆணழகன் பிரபாஷை கட்டித் தழுவ ஆசைப்படுகிறேன்”

என்னத்தைச்சொல்ல!