எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. நெருக்கமான சீன் வைக்காதே! —அர்ஜூன்

“பெண்கள் சொல்வதெல்லாம் மீ டூ வில் உண்மைதான் ” என நம்புகிற மனம் ஆண்கள் சொல்வதை நம்பாமல்  இருக்க முடியுமா?

நம்பு என்கிறார் இயக்குநர் அருண் வைத்யநாதன்.

“லேகா வாசிங்டன் உங்க ஹீரோயின் ஆச்சே, உங்க ஹீரோ அர்ஜூன் மீது தப்புத் தப்பா சொல்றாங்களே? என்ன சார்  அந்த நடிகை சொல்றது உண்மைதானே?”

“மகாத் தப்புங்க. அர்ஜுன் பக்கா ஜென்டில்மேன். அவங்க ரெண்டு பேருக்கும் நெருக்கமான சீன் கதையில் இருந்தது. நடிச்சு முடிஞ்சதும் என்னிடம் வந்து “இந்த மாதிரி சீன்லாம் எனக்கு வைக்காதேப்பா. எனக்கு வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க என்று சொன்னார். அவர் தப்புப்பண்ண வாய்ப்பே இல்லிங்க.” என்றார்.