கட்டபஞ்சாயத்து நடத்துகிறார் பாக்யராஜ்!ஏ.ஆர். முருகதாஸ் குமுறல்!!

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குனர் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர் .முருகதாஸ் படமாக்கியுள்ளார். இந்தக் கதையை ஏற்கெனவே நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். எனவே இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ஏ ஆர்.முருகதாஸ் கூறியதாவது,

“கடந்த பத்து ஆண்டுகளாக அரசியலை மையப்படுத்தும் படங்கள்ஏதும் வரல.

அப்படி எடுத்தா என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்பது உங்களுக்கே தெரியும் .

இப்ப அப்படியொரு நிலைமை இயற்கையாவே இல்ல .

அரசியலை மையபடுத்தி ஏன் நீங்கள் படம் எடுக்க கூடாது என பலரும் ஸ்பைடர் படத்தின் போதே எல்லோரும் என்னிடம் கேட்டனர். நானும்சரி அரசியல் படம் ஒன்னு எடுப்போம் என முடிவு செய்தேன்.

அரசியல் என்பது தேர்தல் இல்லாமல் இல்லை . இடைத் தேர்தல் வருமா ,ஆட்சி நீடிக்குமா , யார் ஜெயிப்பா? அவர் அரசியலுக்கு வருவாரா,இவரு வருவாரா? எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தான் தற்போது மக்களின் மனநிலை அதை மையப்படுத்தலாமே என முடிவு செய்தேன்

.அப்ப வந்து நடிகர் திலகத்தின் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டது. யாரோ போட்டு விட்டனர் ,

கமல்சாருக்கு பூத்துக்கு போயி அவருக்கு ஓட்டே இல்லைன்னு சொன்ன சம்பவமும் நடந்தது.

இதைவிட ஒரு எம்பி தேர்தலில் நானும் என்மனைவியும் ஓட்டு போட போன போது, எனக்கு ஒட்டு இல்ல என் மனைவிக்கு மட்டும் இருந்தது.

திரும்ப வெளிய வந்து எழுதி கொடுத்துவிட்டுபோனோம் மறுபடியும் எம் எல் ஏ எலக்சனில் ஓட்டு போட போனபோது எனக்கு ஒட்டு இருந்தது.என் மனைவிக்கு இல்ல. வேற பூத்துன்னு சொன்னாங்க .

இதையே ஒரு பொறியா வச்சு ஒரு கதை பண்ண முடிவு பண்ணினேன் .கஜினி இந்தி ரிலீஸ் பண்ணிக்கிட்டு இருக்கும்போது ஓட்டு போடுறதுக்காக அவுட்டோர் போயிருந்த அமீர்கான் ரிட்டர்ன் வந்துஓட்டு போட்டு போனாரு.

இந்த சம்பவமும் எனக்கு கை கொடுத்தது.

இதையே எடுத்து ஒரு கதை பண்ணலாம்னு முடிவு செஞ்சு நாயகன் மற்றும் அவன் குடும்பமும் அமெரிக்காவிலிருந்து ஒட்டு போடுவதற்காக சென்னை வருகின்றனர். இதில் காதாநாயகன் ஓட்டை மட்டும் யாரோ போட்டுவிடுகின்றனர் .

அவன் ஒரு கார்பரேட் மான்ஸ்டர் . அவனோட விசயமெல்லாமே ஒரு அமெரிக்கன் எகனாமிக் டிசைட் பண்ணுது.

அவ்வளவு பெரிய ஆளோட சொந்த நாட்டுல அவனோட ஓட்டை யாரோ போட்டு விட்டாங்கன்னு சொல்லும்போது நாயகனுக்கு கோபம் வருது.கோர்ட்டுக்கு போறான் .அதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு தான் கதை . இப்ப விசயத்துக்கு வரேன் ஒரு நாள் பாக்யராஜ் எனக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரச்சொன்னார்.

சர்கார் கதை வருண் என்ற ராஜேந்திரனின் செங்கோல் கதையுடன் ஒத்துப்போகிறது என்றும் அவருக்கு ஏதாவது செட்டில் செய்து விடும்படியும் கட்ட பஞ்சாயத்து செய்பவர் போல் கூறினார்

நான் அப்படி செய்தால் என் கதை திருட்டு கதை என்பது உறுதியாகிவிடும் என்பதால் மறுத்து விட்டு கோர்ட்டில் பார்த்து கொள்ளலாம் எனக்கூறிவிட்டேன்.

இந்தக் கதையை சொந்தம் கொண்டாடும் வருண் என்ற ராஜேந்திரனை நான் இதுவரை நேரில் பார்த்ததும் இல்லை இணைந்து பணியாற்றியதுமில்லை. அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஸ்டில் கேமிராமேனிடம் சொல்லி இந்தக் கதையை நான் திருடிவிட்டதாக சொல்கிறார்கள். ஒரு ஸ்டில்கேமிராமேனிடம் (ஸ்டில்ஸ் விஜய்) யாராவது கதை கேட்பார்களா?

இந்த விவகாரத்தில் ஒரு புகைப்படக் கலைஞரின் மூலம் தான் திருடப்பட்டதாக புகார் சொல்லப்படுகிறது. அப்படியெனில் பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் ஸ்டில்ஸ் விஜய்யை ஏன் நேரில் அழைத்து விசாரிக்கவில்லை.

இதற்கு பாக்யாராஜ் மற்றும் குழுவினர் எனக்கு பதிலளிக்க வேண்டும்.

கதை தன்னுடையது என்று கூறும் வருண் ராஜேந்திரன் பாக்யராஜ் உடன் பணியாற்றியவர்.

அதனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.

13 பேர் கொண்ட கதையாசிரியர்கள் குழுவில் 5 பேர் இரண்டு கதையும் ஒன்று என்று கூறியுள்ளார்கள். 6 பேர் இரண்டும் வெவ்வேறான கதை என்று கூறியுள்ளனர்.

இருவர் நடுநிலையாக இருந்துவிட்டார்கள்.

அப்படியிருக்கையில், எப்படி பெரும்பான்மையானவர்கள் இரண்டு கதையும் ஒன்று என்ற முடிவுக்கு வந்ததாக பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை குழுவில் உள்ள மற்றவர்களின் ஒப்புதலுடன் வெளியானதா?. இரண்டு கதையும் ஒன்று என்று சொன்னவர்கள் யார் என்று தெரிந்தால் அதில் ஒரு உண்மை புலப்படும்.

பாக்யராஜ் இந்த விவகாரத்தில் ஏன் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என்றே தெரியவில்லை.பாக்யராஜ் எழுதி இயக்கிய சின்னவீடு படத்தின் கதையும், கலைமணி எழுதி மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் கதையும் கிட்டதட்ட ஒன்றேதான்.

சின்ன வீடு படத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு கோபுரங்கள் சாய்வதில்லை படம் வெளியானது.

அப்படியானால் நீங்களும் காப்பி அடித்தீர்களா?. நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?

இரண்டு கதையும் ஒன்று என்றால், என் கதையை படித்தார்களா?.

அதாவது என்னுடைய முழுக் கதையை, பவுண்டடு ஸ்கிரிப்டை பாக்யராஜ் படித்தாரா? இல்லையா?.

என்னுடைய பவுண்டடு ஸ்கிரிப்டை நான் இதுவரை அவர்களிடம் கொடுக்கவே இல்லை.

மூலக் கதைக்கான ஸ்கிரிப்டை மட்டுமே பெற்றுச் சென்றார்கள்.

ஒன்று என்னுடைய முழுத் திரைக்கதையையும் படிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் படத்தை பார்க்க வேண்டும்.

நான் படத்தை காட்டுவதாக சொன்னேன். ஆனால், அவர்கள் பார்க்கவில்லை.

வெறும் சினாப்சிஸ் கதையை மட்டும் வைத்துக் கொண்டு கருத்து சொல்வது எவ்வளவு பெரிய தவறு.

இரண்டு முதல்வர்களின் மறைவு தற்போதைய அரசியல் எனத் தற்காலத்தில் நடக்கக் கூடியதை வைத்து நான் படம் எடுத்திருக்கும் நிலையில், 2007 இல் பதிவு செய்யப்பட்டுள்ள கதையும் இதுவும் எப்படி ஒன்றாகும்.

நேர்மையாக பணியாற்றிய எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனைஎனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறீர்கள்.அதற்கு பேசாமல் என்னை தூக்கில் கட்டி தொங்க விட்டிருக்கலாம்

சரியாக தூங்கக் கூட முடிய வில்லை .தூக்க மாத்திரைபோட்டு தான் தூங்குகிறேன் .

காலையில் வாக்கிங் போனால் கூட என்னால் நிம்மதியா போக முடியல.யாரு எங்கிருந்து ,எதற்காக அடிக்கிறாங்கன்னே தெரியல .கோர்ட்டில் எனக்கு நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கு” என்று ஏகத்துக்கும் குமுறித் தள்ளினார் .

யாரை பலி கிடாவாக ஆக்கப்போகிறதோ நீதி மன்றம்,?