விஜய், சூர்யா பட நாயகி மருத்துவமனையில் அனுமதி !

விஜய், சூர்யா இணைந்து நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவின்  ஜோடியாகவும் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தற்போது உடல்நலமின்றி கர்நாடக மருத்துவமனை ஒன்றில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து நடிகை விஜயலட்சுமியின் சகோதரி உஷாதேவி கூறியதாவது: விஜயலட்சுமிக்கு நேற்று ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். இதன் காரணமாக  பணக்கஷ்டத்தில்  உள்ளோம். விஜயலட்சுமியின் சிகிச்சைக்கு சினிமா துறையினர் உதவ வேண்டும்‘ என்று கூறியுள்ளார். விஜயலட்சு மி கன்னடத்தில் சிவராஜ்குமார்,விஷ்ணுவர்தன் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.தமிழில் பிரண்ட்ஸ்,பாஸ் என்கிற பாஸ்கரன்உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.