சென்னை திரும்பினார் ரஜினிகாந்த் !
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக கடந்த 25ம் தேதி முதல் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக இன்று மாலை சென்னை திரும்பினார். அவரை ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதன் காரணமாக மக்கள் மன்ற நிர்வாகிகள் உள்பட எவரையும் ரஜினிகாந்த் சந்திக்க மாட்டார் என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம் .