இயக்குனர் வெற்றிமாறன்.மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைக்கதையாக்கி நகைச்சுவை நடிகர் சூரியை , கதையின் நாயகனாக்கி புதிய படம் ஒன்றை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இது,துபாய் சென்று வேலை பார்க்கும் ஒரு தமிழ் இளைஞனை பற்றிய கதை என்பதால், படக்குழுவினர் துபாய்க்கு செல்ல இருந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது .
இதனால்திட்டமிட்டபடி படக்குழுவினரால் துபாய் செல்ல முடிய வில் லை . இதனால் சூரி நடிக்கும் படத்தின் கதையை வெற்றி மாறன் கைவிட்டு விட்டு, எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை படமாக்கும் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தொடங்கி,தொடர்ந்து நடந்து வருகிறது. . ஒரே கட்டமாக, இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க வெற்றிமாறன் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் தனது உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளாது என்று பாரதிராஜா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாரதிராஜா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தற்போது ஆடுகளம் கிஷோர் ‘கமிட்’ செய்யப்பட்டு நடித்து வருகிறார்.