என் பாடல்களை கேட்பது தான் உங்கள் தலையெழுத்து! -இளையராஜா.
சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைத்து வந்த இளையராஜா, சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டூடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் வழக்கறிஞர்கள் மூலமாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரை விலைக்கு வாங்கி, தற்போது அதை தனது புதிய ரெக்கார்டிங் ஸ்டூடியோவாக இளையராஜா மாற்றி உள்ளார்.
இந்த ஸ்டுடியோவுக்கு ‘இளையராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.. இந்த ஸ்டூடியோவில் முதல் முறையாக வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாகவும்.விஜய்சேதுபதி முக்கிய வேடத்திலும் நடிக்கும் படத்துக்கான பாடல் பதிவை இளையராஜா இன்று காலை தொடங்கினார்.தனது முதல் பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார்.தொடர்ந்து,இளையரா
இது குறித்து இளையராஜா கூறியதாவது,”சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப் படங்கள் தயாராகி வெளியே போய்க் கொண்டிருந்தன. அவ்வப்போது சில இந்திப் படங்களும் உருவாகி வந்தது.. இங்கிருந்த ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. அந்தச் சமயத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோவாக விஜயா வாஹினி ஸ்டுடியோ இருந்தது. அந்த ஸ்டுடியோவை இன்று காணோம். ஜெமினி ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோ, கோல்டன் ஸ்டுடியோ, ஏவிஎம் ஸ்டுடியோ, விஜயா கார்டன் எனப் பல ஸ்டுடியோக்கள் இன்று இல்லை.
இந்த வரிசையில் பிரசாத் ஸ்டுடியோவும் சேர வேண்டும் என்று வெளியே வந்துவிட்டேன். இதனால் எனக்கு ரெக்கார்டிங் ஸ்டுடியோ தேவைப்பட்டதால் என்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி,, புதிதாக உருவாக்கி, இன்று இசையமைக்கும் பணிகளைத் தொடங்குகிறேன்.இன்னும் ஸ்டூடியோவின் முழு வேலையும் முடிவடையவில்லை.விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். இன்னும் உள்ளே கொஞ்சம் வேலை இருப்பதால் பிப்ரவரி 7, 8-ம் தேதி முதல் தொடர்ச்சியாகப் பணிபுரியத் தொடங்குவேன்.மாறிக்கொண்டே இருக்கும் இந்தத் திரையுலகில், தலைமுறைகளைக் கடந்து இசை சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த ஸ்டுடியோ இன்று தொடங்கப்பட்டுள்ளது என்று கூட சொல்லலாம்.
நம் வாழ்க்கையில் தடை என்பது தவிர்க்க முடியாதது. அதையெல்லாம் தாண்டித்தான் செல்ல வேண்டும் காக்கையின் எச்சம் நம் சட்டையின் மீது விழுந்து விட்டால் அதை துடைத்து விட்டு செல்வது இல்லையா அது போல தான் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகளும். இந்த நாளை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கிறார்கள் எனக்கு வாழ்க்கையில் எல்லா நாளும் ஒரே நாள் தான்.என்று கூறினார்.
மேலும், “தமிழ் ரசிகர்களுக்கு இனி எந்த மாதிரியான பாடல்கள் எல்லாம் கிடைக்கும். என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு இளையராஜா பதில் கூறுகையில், “மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தச் சமயத்தில் எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் அமைக்கும் இசையைத்தான் அவர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படிப் பாடல்கள் போடுவீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது? அதை யாராலும் சொல்ல முடியாது. மழை எப்போது வரும் என்று மழையிடம் கேட்க முடியுமா?” என்று தெரிவித்தார். இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவிற்கு வருகை தந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா,அவரும் இளையராஜாவும் இணைந்து எடுத்துக்கொண்ட மெகா சைஸ் புகைப்படத்தை இளையராஜாவுக்கு வழங்கினார்.