சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ மற்றும் ‘பத்து தல’ படங்களில் நடித்துவரும் சிம்பு,தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம்மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக .நடிகர் சிம்புவின் அம்மா உஷாராஜேந்தர் தலைவராக உள்ள தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்துக்காக சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள அச்சங்கத்தி
இது குறித்து தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,, “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நேரத்தில், தாமாக முன்வந்து ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக அறிவித்த நமது சங்க உறுப்பினர் சிலம்பரசனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த படத்தின் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் இப்படத்தை வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகியுள்ள ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு டீசர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.