
மிகவும் அரிதான ,விலை உயர்ந்த தனிம பொருள் இரிடியம்.
இந்த இரிடியம் பொருளை வாங்கித்தருவதாக சொல்லி பல ஏமாற்றுவேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போது இது போன்ற மோசடி வேலையில் தொடர்புடையவர் என சொல்லி நடிகை ஜெயசித்ராவின் மகன் இசையமைப்பாளர் அம்ரீஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இவர் 2010 -ல் வெளியான நானே என்னுள் இல்லை என்கிற படத்தின் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதன் பின்னர் அதிக அளவில் படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். குறிப்பாக மொட்டசிவா கெட்ட சிவா ,பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்கள் நல்ல பெயரை தந்தன. தற்போது ஐந்துக்கு அதிகமான படங்களுக்கு மெட்டு போட்டிருக்கிறார்.
திரைத்துறையில் நல்ல செல்வாக்குடன் வளர்ந்து வருகிற நிலையில் நெடுமாறன் என்கிறவர் போலீசில் அம்ரீஷ் மீது மோசடி புகார் கொடுத்திருக்கிறார்.
விலை உயர்ந்த தனிமப்பொருளான இரிடியம் தன்னிடம் இருப்பதாக சொல்லி 26 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை தன்னிடம் இருந்து அம்ரீஷ் பெற்றிருக்கிறார் என்றும் ஆனால் போலியான பொருளை கொடுத்து ஏமாற்றிவிட்டார் என்பதாகவும் புகார் சொல்லி இருக்கிறார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அம்ரீசை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.












