இந்தியன் 2 பட தாமதம், லைகா நிறுவனமே காரணம்! – இயக்குனர் ஷங்கர்

 

இந்தியன் — 2′ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனமான லைகா மனு தாக்கல் செய்தது .இவ்விவகாரம்  தொடர்பான வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமே காரணம் என்றும், படப்பிடிப்பின் போது கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டது, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது,

கொரோனா ஊரடங்கு இவை அனைத்துமே படப்பிடிப்பு தாமதமாக காரணங்களாகும் பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல. லைகா நிறுவனம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.படத்தின் பட்ஜெட்டை ரூ 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை லைகா ஏற்படுத்தியது. அரங்குகள் அமைப்பது, நிதி ஒதுக்குவதில் லைகா தாமதமப்படுத்தியது.மேலும் இந்தியன் — 2′ படம் நிலுவையில் இருந்தாலும் வேறு படங்களை இயக்க எனக்கு சுதந்திரம் உள்ளது. இந்த படத்துக்கான ஒப்பந்தம் வேறு படங்களுக்காக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தாது.கடந்த 2020 ஜனவரி வரைக்குமான சம்பளத்தை பெற்றுள்ளேன். பிப்ரவரி மார்ச் மாதங்கள் மேற்கொண்ட பணிக்காக டிசம்பரில் தான் சம்பளம் பெற்றேன்.கடந்த  2020 ஏப்ரலில் இருந்து இதுவரை சம்பளம் பெறவில்லை. ஆனால் நிறைய பணிகளை முடித்து இருக்கிறேன் .என இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. .இதையடுத்து இவ்வழக்கு விவகாரத்தை வரும் ஜூன் 4 ந்தேதிக்கு நீதிமன்றம் தள்ளி  வைத்தது.