ரஜினியின் கடைசி படத்தை இயக்கும் தனுஷ்?
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என மெகா நட்சத்திர பட்டாளமே நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியிலும் இப்படத்தின் படப்பிடிப்பு பல தடைகளுக்கு பிறகும் ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்துவந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு ரஜினி சென்னை திரும்பினார்.
இதையடுத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 நாட்கள் தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று 2 வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டார்.இதையடுத்து விரைவில் அவர் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார் .
இதையடுத்து மீண்டும் புதியப்படம் ஒன்றில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இப்படத்தை இயக்கவுள்ளவர்களின் பட்டியலில் பிரபல 2 இயக்குனர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.இருவரும் ரஜினிக்காக சொன்ன ஒன் லைனை முழுதிரைக்கதையாக உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், ரஜினியின் அடுத்தப்படத்தை அவரது மருமகனும்,நடிகர் மற்றும் இயக்குனருமான தனுஷ் இயக்க உள்ளதாகவும்,.அண்ணாத்த படம் வெளியானவுடன் இப்பட த்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது .
மேலும் இப்படத்துக்கு பிறகு ரஜினி நடிப்புக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.ஆனால் ரஜினி அறிவிக்கும் வரை இத்தகவல்கள் அனைத்து வதந்தியே .ரஜினியின் முடிவு அவரைத்தவிர யாருக்கும் தெரியாதுஎன்கிறது ரஜினியின் நெருங்கிய வட்டம்.
இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பல அவதாரங்கள் எடுத்துள்ள தனுஷ், ப. பாண்டி படம் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். இது தனுஷ் இயக்கிய முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமாக உள்ளது என்று பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.