மனுஷனா மாறுங்கடா… பிரபல நடிகை கடும் சீற்றம் !!

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாராவும் ஒருவர். இந்நிலையில்,நடிகை அணு சித்தாரா, ரம்ஜான் திருநாளை முன்னிட்டு முஸ்லிம் பெண் போல் உடை அணிந்த தனது புகைப்படம் வெளியிட்டு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்த புகைப்படத்தை பெரும்பாலான நெட்டிசன்கள் வரவேற்றுதங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், ஒருவர் மட்டும் ’முஸ்லிம் மதத்திற்கு மாறி விட்டீர்களா? என்ற நோக்கத்துடன் ’மாறி விட்டீர்களா? என்று கேள்வியை எழுப்பி இருந்தார்.இதற்கு நடிகை அனுசித்தாரா ஒரே ஒரு வார்த்தையில் ‘மனிதன்’ என்று நெத்தியடியாக பதிலளித்துள்ளார்.
மதம் மாறிவிட்டீர்களா? என்ற நோக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ’மனிதனாக மாறிவிட்டேன்’ என்று பதிலளித்த அனுசித்தாராவின் இந்த பதில் சமூக வலைத்தளங்களால் வைரலாக பரவி வருகிறது. மதவெறியுடன் இருப்பவர்கள் ’முதலில் மனுஷனாக மாறுங்கடா’ என்பது போன்ற கருத்துக்கள் அதிகம் பதிவாகி வருகின்றன.