முள் கீரிடம் சுமக்கும் ஸ்ருதிஹாசன் !
சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை ஸ்ருதிஹாசன் . தற்போது ஊரடங்கு காலம் என்பதால் இணையத்தில் தினமும் ஏதாவது ஒரு கருத்தை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் தனது புதிய காதலர் டூடுல் வடிவமைப்பாளரான சாந்தனு ஹசாரிகாவுடன் நெருக்கமாக இருக்கும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து, “லாக்டவுனில் என்னுடைய சிறந்தவருடன்… நன்றி, இரண்டு பைத்தியங்கள், சுவையான உணவு, கிரியேட்டிவிட்டி, கலை, பேச்சு, மகிழ்ச்சியான அதிர்வுகள்..” எனப் பதிவிட்டு இருந்தார்.இது பெரும் வைரலானது.
இவ்விவகாரத்தில் ஸ்ருதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவாகின.இந்நிலையில், தற்போது , இவர் முள்கீரிடம் ஒன்றை தலையில் வைத்துக்கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன், “தைரியம் உள்ளவர்கள் முள்ளை புரிந்து கொள்ளவில்லை , ரோஜாவுக்காக ஒரு போதும் ஏங்கக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.