விஜயகாந்துடன் முதல்வர் முக. ஸ்டாலின் ‘திடீர்’ சந்திப்பு!

 

 

சென்னை சாலி கிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டுக்கு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோரம் சென்றனர் இது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு என்றும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சந்திப்பின் போது தேமுதிக சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிக்கப்பட்டதாக வும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியை முறித்து கொண்டு அமமுக உடன் தேமுதிக கைகோர்த்து போட்டியிட்டது.இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியுடன் தேமுதிகவும் இணையலாம் என்றும், அதற்கான முதல் கட்ட சந்திப்பாக கூட இருக்கலாம் எனக் கருதவும் வாய்ப்புள்ளது.