நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடிக்கிறார், இப் படத்தின் படப்பிடிப்புகடந்த 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டாலும் கொரோனா ஊரடங்கால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு .பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது மீண்டும் படப்பிடிப்பு நடந்தது.ஆனால் படம் தொடங்கப்பட்டு கிட்டத்திட்ட 2 ஆண்டுகள் ஆகியும் படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
கிரிக்கெட் கிரவுண்ட் வரையிலும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்கும் நிலை உருவானது.இந்நிலையில், ஒரு வழியாக இன்று வலிமை மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மிகவும் ஸ்டைலிஷான கறுப்பு கோட் , ஹெல்மெட் அணிந்தபடி ஒருவர் நிற்க அவரின் ஹெல்மெட் வைசரின் வழியே காட்சிகள் விரிகிறது. . பிரமாண்ட கட்டுமான நடைபெறும் இடத்தில் , பல மனிதர்களின் உழைப்பில் .வெல்டிங் வேலைகள் நடக்கிறது. அடுத்த காட்சியில் சிலர் ஓடிவர அவர்களுக்கு முன்னால் அஜித் சண்டைக்கு தயாராகிறார்.தொடர்ந்து, Power is a state of mind என்கிற வாசகம் அனிமேஷன் காட்சியாக தோன்றுகிறது. இறுதியாக மோட்டார் சைக்கிளின் சைலன்சரில் தீப்பொறி பறக்க அடுத்தக்காட்சியாக ஸ்டைலிஷ் அஜித் வந்து நிற்கிறார்.இந்த மோஷன் போஸ்டர் அஜித் ரசிகர்களால் இணைய தளங்களை தெறிக்க விட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டில் உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் தமிழ் படமான “வலிமை” படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் (BayView Projects) மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் H. வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தில் மிக வலுவான தொழில்நுட்பக் குழுவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பாராயன் அமைத்துள்ளார். கே.கதிர் கலை இயக்கம் செய்ய, , அனு வர்தன் இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், பி.ஜெயராஜ் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
மோஷன் போஸ்டரில் 2021 ஆண்டே இப்படம் திரைக்கு வரும் என்பதையும் உறுதிசெய்திருக்கிறார்கள். ஆனால் தியேட்டரா,ஓடிடி தளமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
.