சவால் விட்ட மீரா மிதுனுக்கு ‘ஆப்பு’ வைத்த போலீஸ்! ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்!!

பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்ட வழக்கில், தன்னை யாராலும் கைது செய்ய முடி­யாது எனவும், அப்­ப­டியே கைது செய்­தாலும் பெருந்­த­லை­வர்­கள் சிறை­யில் இருந்­த­தைப் போல் நானும் இருப்­பேன் எனப் பேசினார். முடிந்­தால் கைது செய்யுங்­கள் என சவால் விட்டு நடிகை மீராமிதுன் பர­ப­ரப்பு வீடி­யோவை வெளியிட்­டார்.

அந்த வீடியோ­வும் சமூக வலை­தளங்­களில் வைரலா­ னது.இதை­ய­டுத்து கேரள மாநிலம் ஆலப்பு­ழாவில் உள்ள நட்­சத்திரவிடுதி ஒன்றில் மீரா மிதுன்அவ­ரு­டைய ஆண் நண்­ப­ரு­டன் பதுங்கி இருப்­பது தெரி­ய­வந்­த­து.இதையடுத்து கேரளாவில் பதுங்கியிருந்த மீராமீதுணை சென்னை மத்தியகுற்­றப்பிரிவு போலீ­சார் நேற்று கைது செய்­த­னர்.

அப்­போது போலீ­சாரு­டன்நடிகை மீரா மிதுன் கடும் வாக்குவாதத்தில் ஈடு­பட்டார்.அவரது செல்­போனைபோலீ­சார் பறிமுதல் செய்ய முயன்ற போது , “தன்னை போலீசார் கொடுமைப­டுத்து­வ­தாக கூறி மீரா மிதுனே வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலை தளததில் பரப்பினார். அதன்பிறகுபோலீ­சார்செல்­போனைபறி­முதல் செய்­த­னர்.

மீரா மிதுனை கைது செய்­த­போது அவ­ரது ஆண் நண்­பர் அபி­ஷேக்­கை­யும் போலீ­சார் அதே வாக­னத்தில் அழைத்து வந்­த­னர்.பெண் போலீ­ சாரின் உதவியோடு கைதானமீரா மிதுனை சென்னை காவல் ஆணை­யர் அலு­வ­ல­ கத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு கொண்டு வரப்­பட்­டார். 24 மணி நேரத்தில் கொண்டு வரப்­பட்­ட­தால் டிராண்சிட் வாரண்டு பெறவில்லை என்று சென்னை மத்திய குற்­றப்பிரிவு போலீ­ சார் தெரிவித்துள்­ள­னர்.

சென்னைகாவல் ஆணை­யர் அலு­வ­ல­கத்திற்கு 4– வது நுழை­வு­வாயில் வழி­யாக உள்ளே கொண்டு வந்­த­னர். அப்­போது மீரா மிதுன்,“தன்னு­டைய கையை போலீ­ சார் உடைக்க முயன்­ற­தா­க­வும் போலீ­சார் கொடுமை படுத்து­வ­தா­கவும், சாப்­பாடு கொடுக்­க­ வில்லை என்றும்” சத்­த­மிட் ட­ப­டியே சென்­ற­தால் சிறிதுநேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

பிறகு முதல் தளத்தில் வைத்து சென்னை மத்திய குற்­றப்பிரிவு போலீ­சார் மீராமிதுனு­டன் விசாரணை நடத்தி வருகின்­ற­னர். ஆனால் மீரா மிதுன் விசா­ ர­ணைக்கு ஒத்து­ழைக்­கா­மல் தொடர்ந்து போலீ­சாரு­டன் வாக்கு­வாதம் செய்­தார்.

பின்னர் கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்த மீரா மிதுனை சைதாப்பேட்டை 17 வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் வீட்டில் ஆஜர்படுத்தினர்.இவ் வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்ற நடுவர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நடிகை மீரா மிதுனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.