அஜித் படம்னா கூட காமெடி பண்ணமாட்டேன்! சீறிய சந்தானம் !!
சிம்புவால் ‘மன்மதன்’ படத்தில் அறிமுகமானார் சந்தானம்.. தொடர்ந்து சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த சந்தானத்துக்கு, ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஹீரோவிற்கு இணையாக ஒரு வேடத்தை இயக்குனர் ராஜேஷ் கொடுத்தார். இந்த காலகட்டத்தில் வடிவேலு கதாநாயகனாகத்தான் நடிப்பேன் அடம்பிடித்து வந்த வாய்ப்புகளைஎல்லாம் ஒதுக்கித்தள்ள, சுக்கிரதிசை சுழன்று அடிக்க, தமிழ் சினிமாவின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வாக சந்தானம் மாறினார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் காமெடி ஹீரோவாக களமிறங்கினார் படத்துக்கு வரவேற்பு ஏகத்துக்கும் கிடைக்க,சந்தனத்திற்கும் ஹீரோ ஆசை தலைதூக்கியது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ படங்களில் முழுநீள ஹீரோவாக நடித்தார். நடித்த படங்கலும் சொதப்பவில்லை. இதனால் தற்போது ‘நோ காமெடி ஒன்லி ஹீரோ’ என்ற முடிவிற்கு சந்தானம் வந்துவிட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம்வந்த சந்தானம் தற்போது ‘தில்லுக்கு துட்டு’, ‘சர்வர் சுந்தரம்’ போன்ற படங்களில், ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்நிலையில்,
வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜீத்-சிறுத்தை சிவா மீண்டும் இணைந்த தல 57. படத்தில் சந்தானம் காமெடி செய்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் தரப்பு அவரை அணுகி,நீங்க நடிச்சா, ‘வீரம்’ போல இப்படத்திலும் உங்க இருவரின் ( அஜித்-சந்தானம்) காமெடி பேசப்படும் என எடுத்துரைக்க,. ஆனால் சந்தானமோ, ” எல்லோரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லவே விரும்புகிறார்கள். இன்றும் காமெடி வேடங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் இதிலேயே நீண்ட காலம் நிலைத்திருக்க நான் விரும்பவில்லை” நீங்க வேற ஆளை பாத்துக்கங்க என்று கூறியிருக்கிறார். இதேபோல விஜய்யின் ‘தெறி’ படத்தையும் சந்தானம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. போன மச்சான் திரும்பி வந்தான்ங்கிற மாதிரி ஹீரோ ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு மீண்டும் காமெடி ஆட்டத்துக்கு வந்த வடிவேலுவைப் போல் சந்தானமும் இறங்கி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறது கோலிவுட்!