மொட்டைமாடியில் ‘நயன்தாரா- விக்கி’ ஜோடி கொண்டாடிய ‘தீபாவளி’!
கோலிவுட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலர்களாகவே வலம் வரும் (இருவரும் ‘லிவிங் டுகெதர்’ பாணியில் குடித்தனம் நடத்தி வருவது வேறு விஷயம் ) நயன் விக்கி ஜோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என நயன் தொலைக்காட்சி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ‘மொட்டைமாடி’யில் வாணவேடிக்கைகளுடன் நயன்தாரா தனது காதலருடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இது குறித்த வீடியோ பதிவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கூறியுள்ளதாவது,”மகிழ்ச்சி என்பது ஒரு பயிற்சி, அந்த பயிற்சியை தயவு செய்து தினசரி எல்லோரும் செய்யுங்கள்.
மகிழ்ச்சி என்பது பட்டாசு மாதிரி வெடிக்கப்படவேண்டும். நாம் நம்முடைய இலக்கை அ டைவதற்கான ஒரே வழி எதுவாக இருந்தாலும் நமது இலக்கை நோக்கி நாம் முன்னேற விடாமுயற்சியை செய்ய வேண்டும்.
இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக இருக்க மறக்க வேண்டாம். வாழ்க்கையை கொண்டாடுவதற்கும் மகிழ்வதற்கும் நிறைய இருக்கிறது என்பதை நமக்கு இந்த பண்டிகைகள் நினைவு கூறுகின்றன.
நம்முடைய வழக்கமான பணிகளில் இருந்து கொஞ்ச நேரம் ஒதுக்கி நல்ல விஷயங்களை பார்த்து மகிழ்ச்சியாக இருங்க. அப்படி இருந்தா நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் ஆக இருப்பீங்க .எல்லோருக்கும் எனது மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு வைரலாகி வருகிறது.
Festive Mode 💣 #HappyDiwali pic.twitter.com/CfkJSe1fTw
— Nayanthara✨ (@NayantharaU) November 4, 2021