மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் இயக்குநர் அமீர் !

 ”அமீர் ஃபிலிம் கார்ப்பரேசன்” நிறுவனமும் – ”JSM பிக்சர்ஸ்” நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்  புதிய திரைப்படத்தின் “PHOTO SHOOT”, இன்று (05.12.2021) தொடங்கியுள்ளது. 
யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு  நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
கதையின் நாயகர்களாக இயக்குனர் அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பி –சத்யா ஆகியோர்  நடிக்க, நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன்  வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
”மெளனம் பேசியதே”, “ராம்”, “பருத்திவீரன்” ஆகிய படங்களைத் தொடர்ந்து  இப்படத்தின் ஒளிப்பதிவையும்   ராம்ஜி மேற்கொள்கிறார் இப்படத்தை, ”அதர்மம்”, ”பகைவன்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ்கிருஷ்ணன் இயக்குகிறார்.