சிம்புவுக்கு காய்ச்சல் ; வீட்டில் ஓய்வு!

நடிகர் சிம்புவின் மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில்,அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.சிம்பு தற்போது ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களிலும்  நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சிம்புவிற்குதிடீரென காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக,நேற்று மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி நடிகர் சிம்பு தற்போது அவரது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பர் நடிகர் மகத் ராகவேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில்

“அனைத்து நண்பர்களுக்கும், ஊடகங்களுக்கும்
@சிலம்பரசன்TR_ உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி! அவர் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார், அவர் வீடு திரும்பினார், அது ஒரு வைரஸ் தொற்று! கவலைப்பட ஒன்றுமில்லை.என தெரிவித்துள்ளார் .