கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!
சமீபத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த மாதம் 4 ந்தேதி குணமடைந்து கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்தார்
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது.இதையடுத்து அவர் தான் நடித்து வரும் விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின .இந்நிலையில்,இன்று காலை கமல்ஹாசன் திடீர் என போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்து கமல் அலுவலகத்தில் விசாரித்த போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காகவே சென்றுள்ளார் என்றும்,இன்று மாலையே அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்தனர்