நீண்ட வருடங்களுக்கு பின்னர் பெற்றோருடன் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ்  தமிழ்த் திரையுலகைத்  தாண்டி டோலிவுட்,பாலிவுட், ஹாலிவுட்என தனது நடிப்பு எல்லையை விரித்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் தன் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவிப்பை  வெளியிட்டுள்ளது திரையுலகினரை  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிரிவு அறிவிப்பிற்கு பின்னர் தனுஷ் ஐதராபாத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில்,  தற்போது தனுஷ் சென்னையில் தனது பெற்றோருடன்   இருப்பதாக கூறப்படுகிறது, 

இந்நிலையில்  தன் அண்ணன் செல்வராகவன் மகள், மகனுடன் நேரத்தை செலவிட்டு வருவது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது..

மேலும் ஐஸ்வர்யாவுடன் போயஸ் கார்டனில்  இருக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தந்தையுடன் போனில் அடிக்கடி பேசி வருகின்றனராம்.

இனிமேல் யாத்ரா லிங்கா  இருவரும் தந்தை தனுஷ் சென்னையில் இருக்கும் நேரங்களில் அவருடனே தங்கிக் கொள்வது  என்வும்  முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே சமயம் இருவரும் மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்து கொள்ளும் முடிவையும் ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது