ரூ 25 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட ‘கூகுள் குட்டப்பா’ ரோபோ

கே.எஸ்.ரவிகுமாரின் சொந்த பட நிறுவனம், அடுத்ததாக ‘கூகுள் குட்டப்பா’ என்ற நகைச்சுவை படத்தை தயாரித்து வருகிறது.இது மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற  ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’படத்தின் ரீமேக்காகும்  .  இதில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்க, புதுமுகங்கள் தர்ஷன், லொஸ்லியா ஆகிய இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள்.இவர்களுடன் யோகி பாபு, மனோபாலா, மாரிமுத்து, பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்  படத்தை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.  ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.விரைவில்  வெளியாகவுள்ள இப்படம் குறித்து இயக்குனர்கள் சபரி,சரவணன் ஆகியோர் கூறியதாவது,”இப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். குறிப்பா முக்கிய கதாபாத்திரமான ரோபோ குழந்தைகளை மட்டுமல்ல அனைவரையும் மிகவும் கவரும் வண்ணம் மிகவும் ஜாலியான கதாபாத்திரமாக மாற்றப்பட்டுள்ளது
இதில்,ஜாலியான சுட்டித்தனமான ‘ரோபோ’ குட்டப்பா சமையல் செய்வது, தேநீர் போடுவது, மிளகாய் அரைப்பது போன்ற வேலைகளை செய்வதுடன் வயலில் விவசாயம் செய்வது என அட்டகாசம் செய்துள்ளது.
படம் முழுக்க முழுக்க அதிரடி  நகைச்சுவை தான் சில காட்சிகள் ரசிகர்களை  உருக வைத்து விடும்.இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஹீரோ தர்சனுக்கு  அப்பாவாக கதையின் நாயகனாகவும்  நடிச்சு இருக்கார். அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்றே சொல்லலாம்.ரோபோவும், கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களின் கைதட்டலால் அதிரும் என நிச்சயமாக சொல்லலாம்  கோவையில் நடக்கிற மாதிரி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மெயின் கதாபாத்திரம் ரோபோ மும்பையில் ஒரு வருடமாக வடிவமைக்கப்பட்டது இதற்காக ரூ.25 லட்சம் செலவழித்துள்ளோம் இப்படம் குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இதற்காக திரையரங்குகளில் 100 சதவீத அனுமதிக்காக காத்திருக்கிறோம்,அரசு அறிவிப்பு வெளியிட்டவுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்போம் என்கிறார்கள்.