சரக்கு அடிச்ச நடிகையை தூக்கிய காவல் துறை !

சரக்கடிச்சிட்டு கார் ஓட்டியதாக பாலிவுட் நடிகையை மும்பை போலீசார் கைது செய்து காவலில் வைத்திருக்கிறார்கள்.

காவ்யா தபார் .’ஏக் மினி கதா’ படத்தில் பிரபலமானவர்.

மது அருந்திவிட்டு கார் ஓட்டி வந்தவர் ஒருவர் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியிருக்கிறார். இவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது போலீஸ்காரரை கண்டபடி கேட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தள்ளுமுள்ளு செய்திருக்கிறார்.

அவரை கைது செய்து நீதித்துறை காவலில் வைத்திருக்கிறார்கள்.