அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் 169 வது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இப்படத்தை விஜய்யின் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் சன் பிக்சர்ஸ் படநிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் துவங்கும் என்றும், இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்என்கிறது படக்குழு,
இந்நிலையில்,ரஜினியின் 170 வது படத்தை இளையராஜா தயாரிக்க, பால்கி இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில்,170வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும்,வலிமை படத்தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் ராகுல் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில்,இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது,, “ரஜினிகாந்த் என்னுடைய நீண்ட நாள் நண்பராக இருந்து வருகிறார். வழக்கமாக நாங்கள் சந்திப்பதுடன், சினிமா குறித்த எங்களது கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்தும் வருகிறோம். ஒருவேளை நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தால், அதனை நானே முதலில் அறிவிப்பேன். தற்போது பரவும் தகவல் போல, கசிந்த தகவல்கள் உங்களுக்கு வராது. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.