‘லியோ’வில் 2000 டான்சர்கள் பங்கேற்கும்  பிரமாண்ட பாடல் காட்சி?

விக்ரம் படத்தை தொடர்ந்து,லோகேஷ் கனகராஜ், விஜய் கேங்ஸ்டராக நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக காஷ்மீரில் நடந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இப்படக்குழு சென்னை திரும்பியது .சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு  சென்னையில் வரும்  மே மாதம் முதல் வாரம் தொடங்கும்  என்றும், இதில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாம்..இந்நிலையில் சமீபத்தில் ’லியோ’ எல்சியு  படமா? என்ற கேள்விக்கு இப்படத்தின் நாயகி திரிஷா பதிலளிக்கையில், ‘லியோ எல்சியு  படமா, இல்லையா? என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை சொல்வதற்கு எனக்கு அனுமதி இல்லை.இந்த படத்தின் படப்பிடிப்பில் மே ஒன்றாம் தேதி முதல் நான் மீண்டும் கலந்து கொள்ள உள்ளேன். வரும் அக்டோபரில் இந்த படம் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கும்.எனக்கூறியுள்ளார்.   

இந்நிலையில் இப் படத்திற்காக நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் இயக்கத்தில்,  2000 டான்சர்கள் பங்கேற்கும்  பிரமாண்ட பாடல் காட்சி ஒன்றை படமாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் ,  இதில்,தமிழ்நா ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட யூனியன்களை சேர்ந்த நடன கலைஞர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப் பாடலுக்காக வரும்  மே மாதம் 20ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை ரிகர்சல் செய்யப்பட உள்ளதாகவும் ஜுன் 2ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை பாடல் சூட் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது