மலேசிய விபத்து என்னை பலசாலியாக்கி விட்டது! -விஜய் ஆண்டனி

நடிகர்,இயக்குனர் விஜய் ஆண்டனி,  தற்போது அவரே இயக்கி, நடித்து, இசையமைத்து வரும் ‘பிச்சைகாரன்-2’  திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில்,  “இப்படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறியது எதுவும் திட்டமிடபடவில்லை, எல்லாம் தற்செயலாக தான் நடந்தது. நான் ‘பிச்சைகாரன் 2’ படத்திற்கான கதையை எழுதி அதனை இயக்குனர் சசியிடம் கொண்டு போய் கொடுத்தேன், ஆனால் அந்த சமயத்தில் அவர்வேறு 2  படங்களில் பிஸியாக இருந்தார்.  அதன் பின்னர் நான் வேறு சில இயக்குனர்களை  அணுகினேன், ஆனால் எதுவும் சரிவரவில்லை   உடனே நானே இந்த படத்தை இயக்க முடிவு செய்து, அதன்படி இயக்குனராக மாறிவிட்டேன் .
இப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பிச்சைகாரன்’ படத்தின் தொடர்ச்சி அல்ல.  ‘பிச்சைக்காரன்’ படம் தாய்-மகன் உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாகக் கொண்டிருந்தது ஆனால் ‘பிச்சைகாரன்-2’ படம் அண்ணன்-தங்கை உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. என்றவர், தனக்கு படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து கூறுகையில், “பொதுவாக ஆக்‌ஷன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் செய்யும் போது விபத்துகள் அதிகம் நடப்பது இயல்பு தான், ஆனால் ஒரு காதல் பாடல் படப்பிடிப்பின் போது நான் விபத்துக்குள்ளானேன். கடலில்  ‘ஜெட் ஸ்கீயிங்’ செய்யும் போது எனது மோட்டார் படகு, ஒளிப்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் இருந்த மற்றொரு மோட்டார் படகின்  மீது மோதிவிட்டது.  அந்த விபத்தில் எனக்கு முகத்தில்,தாடையில்  காயம் ஏற்பட்டது.  இப்போது எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது, இந்த விபத்திற்குப் பிறகு நான் மனதளவில் பலசாலியாக இருப்பதாக உணர்கிறேன்.  நான் ஒரு புதிய நபராக மாறியது போல உணர்கிறேன், வாழ்க்கையில் பல விஷயங்களை சாதிக்கும் அளவிற்கு எனக்கு அதிக நம்பிக்கை கிடைத்துவிட்டது போன்று நான் உணர்கிறேன் இவ்வாறு அவர்  கூறினார்