அட்லீ குழந்தைக்கு ஷாருக்கானின் ‘அப்பா’ பெயர் !
இயக்குனர் அட்லீ தற்போது பெரும் போராட்டத்துக்கு பின்னர் இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் வட இந்திய ரசிகர்கல் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அட்லீக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஷாருக் கான் உட்பட சினிமா துறையின் முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து கூறினார்கள்.
இந்நிலையில், சுமார் 4 மாதங்கள் கழித்து ப்ரியா – அட்லி தம்பதி தங்கள் குழந்தையின் பெயரை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர். தங்கள் குழந்தைக்கு ‘மீர்’ எனப் பெயரிட்டுள்ளதாக ப்ரியா தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு திரைத்துறையினரும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது நன்றியை ஷாருக்கானுக்கு தெரிவிக்கும் வகையில்,ஷாருக்கானின் தந்தையின் பெயரான மீர் தாஜ் முகமது கான் என்கிற பெயரில் இருந்து மீர் என்கிற பெயரை எடுத்து அட்லீ தனது மகனுக்கு சூட்டியிருக்காரே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மீர் என்றால் தலைவன், கடல் என்கிற பொருள் வருவதாக கூறுகின்றனர்.