திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து முடிவை எடுத்த நடிகை!
பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா.
இவர் சிப்பிக்குள் முத்து தொடரில் நடிக்கும் போது உடன் நடித்த நடிகர் விஷ்ணுகாந்துடன் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்து,
இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் திருமணமும் செய்து கொண்டனர்.இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், இன்ஸ்டாகிராமில் இருந்து திடீர் என தங்களின் திருமண புகைப்படங்களை இருவருமே அதிரடியாக நீக்கிவிட்டனர்.
இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து,விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த மௌனம் வெறுமையானதல்ல, உண்மை மற்றும் பதில் நிறைந்தது என்று பதிவிட்டிருந்தார்.
விவாகரத்து முடிவுக்கு காரணம் குறித்து நடிகை சம்யுக்தா வெளியிட்ட பதிவில், விஷ்ணு கரந்தை நம்பி நான் ஏமாந்துவிட்டேன், அவருக்கும் எனக்கும் 10 வருஷம் வித்தியாசம் எனவும் தெரிவித்துள்ளார்.திருமணமான ஒரே மாதத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பிரிந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது