டைகர் சோன்… டைகர் நாகேஸ்வர ராவின் கோட்டை…”
தி காஷ்மீர் ஃபைல்ஸ், கார்த்திகேயா 2, உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது ஒரு பான் இந்திய திரைப்படமாக “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தை தயாரிக்கிறது இப்படத்தில் ரவிதேஜா நடிக்கிறார். இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் துவக்கமே அனைவரது புருவத்தையும் உயர்த்தும் வகையில் மிக பிரமாண்டமாக துவங்கியுள்ளது.
படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சுவாரஸ்யமான ஒரு வீடியோவை தற்போது தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ராஜமுந்திரியில் உள்ள சின்னமான ஹேவ்லாக் பாலம் (கோதாவரி) எனும் இடத்தில் பிரம்மாண்டமாக பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவிற்கென ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
Related Posts
அடர்ந்த தாடியுடன் முரட்டுத்தனமான கெட்-அப்பில் காணும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரவி தேஜா கம்பிகளுக்குப் பின்னால் உறுமும் புலி போல மிரட்டுகிறார். இந்த பர்ஸ்ட் லுக் வீடியோ நடிகர்கள் வெங்கடேஷ் , ஜான் ஆபிரகாம், சிவ ராஜ்குமார், கார்த்தி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் குரலில்,தெலுங்கு,இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில்,வெளியாகியுள்ளது.
“1970 ஆம் வருடங்களில் வங்காள விரிகுடா கடலோரப் பகுதியில் உள்ள ஒரு குட்டிக் கிராமம்… உலகையே பயமுறுத்தும் இருள் கூட அங்குள்ள மக்களை பார்த்து அஞ்சுகிறது… பெரும் சத்தம் எழுப்பும் ரயில் அந்தப் பகுதியின் எல்லையை அடையும் போது நடுங்குகிறது..
. அந்த ஊரின் அடையாளத்தை பார்த்தாலே கால் நடுங்குகிறது… தென்னிந்தியாவின் குற்றத் தலைநகரம் ஸ்டூவர்ட் புரம்… அந்தப் பகுதிக்கு இன்னொரு பெயர்… டைகர் சோன்… டைகர் நாகேஸ்வர ராவின் கோட்டை…” என்று குரல் விளக்குகிறது.