சந்திரமுகிக்காக 2 மாதமாக தூக்கத்தை தொலைத்த கீரவாணி!

பாகுபலி மற்றும்  ‘ஆர்.ஆர்.ஆர்’  படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் உலகளாவிய ரசிகர்களின்  கவனத்தைப் பெற்றவர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, ராஜமௌலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் அவருக்கு மதிப்புமிக்க ஆஸ்கார் விருதையும் பெற்றுத்தந்தது. இந்நிலையில் தமிழில்  பி.வாசு இயக்கி வரும் ‘ சந்திரமுகி 2 ‘ படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார்.  
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ள எம்.எம்.கீரவாணி தற்போது ‘சந்திரமுகி 2’ படத்தின் பின்னணி இசையை முழுவதுமாக முடித்துவிட்டதாக  தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் அப்பதிவில், “சந்திரமுகி 2 ஐப் பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தில் தூக்கமில்லாத இரவுகளை கழிப்பதாகவும், படத்தில் மனதைக் கவரும் காட்சிகளுக்கு உயிர் சேர்க்க இரண்டு மாதங்கள் தூக்கமில்லாத இரவு பகல்கள் தேவைப்பட்டதாகவும் கீரவாணி  பதிவிட்டுள்ளார்,
இப்படத்தில்  ராகவா லாரன்சுடன் , கங்கனா ரனாவத் , லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா, சுபிக்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது, இதையடுத்து இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சந்திரமுகி 2’ ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாக உள்ளது,