ஜவான் (வந்த எடம்) பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது !

ஷாருக்கானின் ஜவான் படத்தின் பாடலான ‘வந்த எடம்..’ பாடலுக்கான திரைக்குப் பின்னால்.. காணொளி தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த காணொளி கேமரா லென்ஸ்க்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்கிறது. 

இயக்குநர் அட்லீ மற்றும் அவரது குழுவினர் ஷாருக்கானுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் பாடலுக்கான வரிகளைக் கற்றுக் கொடுப்பது… இயக்குநரே ஷாருக்கானுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நடன அசைவை பகிர்ந்து கொள்வது… என கவனிக்க வேண்டிய சில தனித்துவமான தருணங்கள்… இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கிறது.

இந்தியில் ‘ஜிந்தா பண்டா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துளிபெலா’ என்றும் ஒலிக்கிறது. இந்தப் பாடல், மொழி எல்லைகளைக் கடந்து தொடர்ந்து  மக்களின் இதயங்களை கவர்ந்து வருகிறது.

இப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் சர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.