ஆக்ஷன், த்ரில்லராக உருவான,”எவனும் புத்தனில்லை ” !
வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய படத்துக்கு ” எவனும் புத்தனில்லை ” என பெயரிடப்பட்டுள்ளது.இதில்,நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகியாக சுவாசிகா நடித்துள்ளார்,
கவுரவவேடத்தில் சினேகன் மற்றும் பூனம் கவுர் நடித்துள்ளனர் . இவர்களுடன் வேல.ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலிமுருகன், எம்.எஸ் .பாஸ்கர், சிங்கமுத்து, முரு, ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ள எஸ்.விஜயசேகரன் கூறியதாவது,” 7130 அடி உயர மலை கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வியையும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் அவர்கள் படும் இன்னல்களை கொண்டு
ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படத்தை உருவாக்கியுள்ளோம்.
ஆக்ஷன், த்ரில்லர் வகைப் படமாகத் தயாராகியுள்ள இப்படத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டது விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்கிறார். இப்படத்தின் வசனத்தை எஸ்..டி.சுரேஷ்குமார்,எழுத,ஒளி