விஜயுடன் இணையும் 4 கதாநாயகிகள்!

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.இப் படத்தின் டிரைலர்  இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில்,விஜயின்  68வது திரைப்படமாக உருவாகும் படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன்  விஜய் கூத்தினை அமைத்துள்ளார் .

இப்படத்தின் முதல் கட்ட பணிகள் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதமே அமெரிக்காவில்  தொடங்கப்பட்டன. இப்படத்துக்காக இப்படக்குழு,உலகின் முன்னணி விஎப் எக்ஸ்  நிறுவனங்களில் ஒன்றான யுஎஸ்சி-  ஐசிடி நிறுவனத்துடன்  ‘லைட் ஸ்டேஜ்’ என்ற முறையில் மேம்பட்ட’ மோஷன் கேப்சர்’  விஎப் எக்ஸ்   பணிகளுக்காக  இணைந்துள்ளது. இப்படத்தின் பூஜை கடந்த  அக்டோபர் 2ம் தேதி சென்னையில் தொடங்கியுள்ளது.

மல்டி ஸ்டாரர் படமாக உருவாகும் இப்படத்தில்  விஜய்யுடன்  பிரபுதேவா,  பிரசாந்த், மோகன், ஜெயராம் ஆகியோரும், கதாநாயகிகளாக மீனாக்ஷி சௌத்ரி, பிரியங்கா அருள் மோகன் இணைந்து இருப்பதாகவும் சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது..

இப்படம் “ஒரு விறுவிறுப்பான அதிரடி ஆக்சன் படமாக இருக்கும்” என அறிவிக்கப்பட்டுள்ளது  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ‘லியோ’ படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் இப்படத்தின் தலைப்பு உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் என தெரிகிறது.