ஆந்திராவில் ‘லியோ’ படத்துக்கு தடை விலகுமா?
விஜய்யின் லியோ படத்தின் அதிகாலை 4 மணி சிறப்புக்காட்சிக்கு நீதி மன்றம் அனுமதி மறுத்து வெளியிட்டுள்ள உத்தரவு குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆந்திராவில் ‘லியோ’படத்தை வருகிற 20-ந் தேதி வரை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
‘லியோ’ என்ற தலைப்பில் அப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துபிரபல பட நிறுவனமான சித்தாரா தொடர்ந்த வழக்கில் அதிரடியாக ஐதராபாத் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இதனால் ‘லியோ’ திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகிற 20-ந் தேதி வரை வெளியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அவசரஅவசரமாக சித்தாரா நிறுவனத்திடம் லியோ பட தரப்பில் பேச்சுவார்த்தையும்நடந்து வருகிறதாம்.
இப்பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே வரும் 19-ந் தேதி லியோ ஆந்திராவில் வெளியாகும் என கூறப்படுகிறது.