விடிய விடிய நடந்த கீர்த்தி சுரேஷின் பிறந்த நாள் பார்ட்டி!

நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று தனது 31வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.இதையடுத்து, நேற்று இரவு நடந்த பார்ட்டியில் நடிகைகள் பிரீத்தா, கல்யாணி பிரியதர்ஷன், பிரியா அட்லீ, நடிகர் கதிர், லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ், இயக்குனர் அட்லீ மற்றும் அவரது திரையுலக நண்பர்கள் என ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இப்பார்ட்டி களை காட்டியுள்ளது. அப்போது எடுக்கப்பட்டபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை கீர்த்தி சுரேஷ், தெறி இந்தியில் ரீமேக்கில், வருண் தவான் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது கீர்த்தி சுரேஷ் மும்பையில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது