நடிகை சுனைனா மருத்துவமனையில் ‘திடீர்’ அனுமதி!
நடிகை சுனைனா நடிப்பில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி ரெஜினா திரைப்படம் வெளியானது.இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், “நான் இப்போது என் சிறு வயது சுனைனாவை நினைத்துப் பார்க்கிறேன்.
ஒரு கட்டத்தில் இதுபோன்று நடப்பது கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என பேசும் போதே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேடையிலேயே கண்கலங்கி அழுதார்.இச் சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் ஒரு புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து,” விரைவில் வலிமையுடன் மீண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதற்காக மருத்துவமனையில் சிகிச்சை என்பது குறித்த காரணம் எதையும் அவர் குறிப்பிடாதது திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.