தமிழ்த்திரையுலகில் கடந்த 1992 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான வில்லுப்பாட்டுக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராணி.
தொடர்ந்து,கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘நாட்டாமை’ திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரம் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஜெமினி’ படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’ என்ற குத்தாட்ட பாடலின் மூலமும் மிகவும் பிரபலமானார்.
இப்படத்துக்கு பின்னர் அவர்’ ஓ போடு’ ராணி என்பதே இவரது அடையாளமாகி போனது.. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு ஒதுங்கிய நிலையில்,தற்போது இவரது மகள் தார்னிகா ராவ் புதிய படமொன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.