‘தளபதி 68’ நடிகர், நடிகைகளின் முழு பட்டியல் வெளியானது!

‘லியோ’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத தனது 68 வது படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில்,விஜயுடன் பிரசாந்த்,பிரபுதேவா,’மைக்’ மோகன்,அஜ்மல்,ஜெயராம், விடிவி கணேஷ்,யோகிபாபு, சினேகா,மீனாட்சி சவுத்ரி, . ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளின் அதிகாரபூர்வ பட்டியலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அப்பட்டியலில் ஏற்கனவே வெளியான பட்டியலில் இடம்பெற்றவர்கள் தவிர,வெங்கட்பிரபுவின் நட்பு வட்டமான, வைபவ்,பிரேம்ஜிஅமரன்,அரவிந்த் ஆகாஷ்,அஜய்ராஜ் ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர்.

சித்தார்த் மணி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு வெங்கட்ராஜ் எடிட்டர் ஆகவும் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.